முருங்கைக்காய் பிரட்டல்

தேவையான பொருட்கள் 

  • முருங்கைக்காய் 
  • தக்காளி 
  • பெரிய வெங்காயம் 
  • காய்ந்த மிளகாய் 
  • தேங்காய் 
  • மிளகாய் தூள் 
  • சாம்பார் தூள் 
  • மஞ்சள் தூள் 
  • நல்லெண்ணெய் 
  • கடுகு 
  • சீரகம் 
  • உப்பு 
  • கறிவேப்பிலை 
  • கொத்தமல்லி இலை 


செய்முறை 

கடாயில், ஐந்து ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ஒரு ஸ்பூன் கடுகு, ஒரு ஸ்பூன் சீரகம், இரண்டு காய்ந்த மிளகாய், ஒரு பெரிய வெங்காயம், சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். பின், ஒரு தக்காளி, ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும். 

இதனுடன், பொடியாக நறுக்கிய ஒரு கப் முருங்கைக்காய், ஒரு ஸ்பூன் மிளகாய் தூள், ஒரு ஸ்பூன் சாம்பார் தூள் சேர்த்து ஐந்து நிமிடம் வதக்கவும். 

பின்னர், 1/2 கப் துருவிய தேங்காயுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அரைத்து இதனுடன் சேர்க்கவும். மேலும், ஒரு டம்ளர் தண்ணீர், தேவையான அளவு உப்பு சேர்த்து பத்து நிமிடம் வேக வைக்கவும். 

இறுதியாக சிறிதளவு கொத்தமல்லி இலை சேர்க்கவும்.


Previous Post Next Post