பச்சை வேர்க்கடலை குழம்பு


தேவையான பொருட்கள் 

  • பச்சை வேர்க்கடலை 
  • தக்காளி 
  • பெரிய வெங்காயம் 
  • தனியா தூள் 
  • பச்சை மிளகாய் 
  • சோம்பு 
  • மிளகாய் தூள் 
  • மஞ்சள் தூள் 
  • தேங்காய்
  • கடுகு 
  • கடலைப்பருப்பு 
  • நல்லெண்ணெய் 
  • உப்பு 
  • கறிவேப்பிலை 
  • கொத்தமல்லி இலை 


செய்முறை

கடாயில், ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய், ஒரு ஸ்பூன் சோம்பு, ஒரு பெரிய வெங்காயம், ஒரு தக்காளி சேர்த்து வதக்கவும். வதங்கிய பின், 1/4 கப் துருவிய தேங்காய், ஒரு ஸ்பூன் தனியா தூள் சேர்த்து கலந்து விட்டு ஆறிய பின் அரைத்து எடுத்துக் கொள்ளவும். 

பின் கடாயில், ஐந்து ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ஒரு ஸ்பூன் கடுகு, சிறிதளவு கறிவேப்பிலை, ஒரு பெரிய வெங்காயம், இரண்டு பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். வதங்கிய பின், ஒரு தக்காளி, ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும். 

பின், 100 கிராம் பச்சை வேர்கடலை, ஒரு ஸ்பூன் மிளகாய் தூள், அரைத்து வைத்துள்ள மசாலா, தேவையான அளவு தண்ணீர், தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க தொடங்கியவுடன் அடுப்பை மெதுவாக வைத்து பத்து நிமிடம் கொதிக்க வைக்கவும். 

இறுதியாக, கொத்தமல்லி இலை சேர்த்து இறக்கவும்.

Previous Post Next Post