தேவையான பொருட்கள்
- வாழைப்பழம்
- தோசை மாவு
- நாட்டுச் சர்க்கரை
- நெய்
- சமையல் சோடா
செய்முறை
இரண்டு வாழைப்பழங்களை பொடியாக நறுக்கி அதனுடன் தேவையான அளவு நாட்டுச் சர்க்கரை சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
பின், அதனுடன் 1/2 கப் உப்பு சேர்க்காத தோசை மாவு, 1/4 ஸ்பூனிற்கும் குறைவாக சமையல் சோடா சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
பின்னர், தோசை கல்லில் தேவையான அளவு நெய் சேர்த்து தயார் செய்து வைத்துள்ள மாவை தோசையாக ஊற்றி வேக வைக்கவும்.
