தேவையான பொருட்கள்
- அப்பளம்
- கடலை மாவு
- அரிசி மாவு
- சீரகம்
- மிளகாய் தூள்
- பெருங்காயத்தூள்
- சமையல் சோடா
- உப்பு
- எண்ணெய்
செய்முறை
பாத்திரத்தில், ஒரு கப் கடலை மாவு, 1/4 கப் அரிசி மாவு, ஒரு ஸ்பூன் சீரகம் அல்லது சோம்பு, இரண்டு ஸ்பூன் மிளகாய் தூள், 1/4 ஸ்பூன் பெருங்காயத்தூள், 1/4 ஸ்பூனிற்கும் குறைவாக சமையல் சோடா, தேவையான அளவு உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.
பின், கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்த பிறகு, அப்பளத்தை தயார் செய்து வைத்துள்ள மாவில் போட்டு எண்ணெயில் போட்டு வேக வைக்கவும்.
