மரவள்ளி கிழங்கு அடை தோசை

தேவையான பொருட்கள் 

  • மரவள்ளி கிழங்கு
  • தோசை மாவு 
  • பெரிய வெங்காயம் 
  • கடலைப்பருப்பு 
  • பச்சை மிளகாய் 
  • சீரகம் 
  • கறிவேப்பிலை 
  • கொத்தமல்லி இலை 
  • உப்பு 
  • எண்ணெய் 


செய்முறை 

100 கிராம் மரவள்ளி கிழங்கை தோல் நீக்கி விட்டு பொடியாக நறுக்கி 1/2 டம்ளர் தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். 

அரைத்து வைத்துள்ள மரவள்ளி கிழங்குடன், ஒரு கப் தோசை மாவு சேர்த்து கலந்து கொள்ளவும். 

கடாயில், இரண்டு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன் ஒரு ஸ்பூன் சீரகம், இரண்டு ஸ்பூன் கடலைப்பருப்பு, சிறிதளவு கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய இரண்டு பெரிய வெங்காயம், பொடியாக நறுக்கிய நான்கு பச்சை மிளகாய் சேர்த்து லேசாக எண்ணெயில் வதக்கிக் கொள்ளவும். 

பின், இதனை மாவுடன் சேர்த்து, தேவையான அளவு உப்பு, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சிறிதளவு  சேர்த்து கலந்து விடவும். 

இறுதியாக, தோசை கல்லில் ஊற்றி தேவையான அளவு எண்ணெய் அல்லது நெய் சேர்த்து வேக வைக்கும். தேவைப்பட்டால் இட்லி பொடி மேலே தூவிக் கொள்ளலாம்.

Previous Post Next Post