தேவையான பொருட்கள்
- தேங்காய் பால்
- சேமியா
- சர்க்கரை
- ஏலக்காய்
- முந்திரி
- உலர் திராட்சை
- நெய்
செய்முறை
பாத்திரத்தில், இரண்டு கப் தண்ணீர் சேர்த்து தண்ணீர் கொதிக்க தொடங்கியவுடன், ஒரு கப் சேமியா சேர்த்து இரண்டு நிமிடம் வேக வைக்கவும்.
பின், தேவையான அளவு சர்க்கரை சேர்த்து நன்கு வேக வைக்கவும். இதனுடன், ஒரு கப் தேங்காய் பால், நெய்யில் வறுத்த 1/4 கப் முந்திரி மற்றும் உலர் திராட்சை, இரண்டு தட்டிய ஏலக்காய் சேர்த்து கொதிக்க தொடங்கியவுடன் அடுப்பை நிறுத்தி விடவும்.
