பருப்பு போண்டா மசாலா


தேவையான பொருட்கள் 

  • கடலைப்பருப்பு 
  • பெரிய வெங்காயம் 
  • மிளகாய் தூள்
  • சோம்பு 
  • இஞ்சி 
  • பூண்டு 
  • இஞ்சி-பூண்டு விழுது 
  • பச்சை மிளகாய் 
  • கறி மசாலா தூள் 
  • மஞ்சள் தூள்
  • சிக்கன் மசாலா தூள்
  • தக்காளி 
  • கடலை மாவு 
  • சோள மாவு
  • உப்பு 
  • கறிவேப்பிலை 
  • கொத்தமல்லி இலை
  • எண்ணெய் 


செய்முறை 

200 கிராம் கடலைப்பருப்பு இரண்டு மணி நேரம் ஊற வைத்து எடுத்துக் கொள்ளவும். 

அதனுடன், சிறிதளவு இஞ்சி, இரண்டு பல் பூண்டு, ஒரு ஸ்பூன் சோம்பு சேர்த்து அரைக்கவும். 

பின், அதனுடன் 1/4 கப் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், ஒரு ஸ்பூன் மிளகாய் தூள், சிறிதளவு கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை சேர்த்து பிசைந்து சிறிய உருண்டைகளாக பிடித்து எண்ணெயில் போட்டு பொரிக்கவும். 

மற்றொரு கடாயில், 25 மில்லி எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ஒரு ஸ்பூன் சோம்பு, சிறிதளவு கறிவேப்பிலை, ஒரு பெரிய வெங்காயம், பொடியாக நறுக்கிய நான்கு பச்சை மிளகாய், ஒரு ஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். 

மேலும், 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள், பொடியாக நறுக்கிய ஒரு தக்காளி, ஒரு ஸ்பூன் சிக்கன் மசாலா தூள், 1/2 ஸ்பூன் கறி மசாலா தூள் சேர்த்து வதக்கவும். பின், ஒரு ஸ்பூன் கடலை மாவு மற்றும் ஒரு ஸ்பூன் சோள மாவை 1/2 டம்ளர் தண்ணீருடன் சேர்த்து கலந்து இதனுடன் சேர்த்து கொதிக்க தொடங்கியவுடன் சிறிதளவு உப்பு, பொறித்து வைத்துள்ள போண்டாவை இதனுடன் சேர்த்து கலந்து விட்டு சிறிதளவு கொத்தமல்லி இலை சேர்த்து இறக்கவும்.

Previous Post Next Post