தேவையான பொருட்கள்
- கத்தரிக்காய்
- நல்லெண்ணெய்
- சின்ன வெங்காயம்
- மஞ்சள் தூள்
- மிளகாய் தூள்
- கடலைப்பருப்பு
- கடுகு
- உப்பு
செய்முறை
கடாயில், 50 கிராம் நல்லெண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ஒரு ஸ்பூன் கடுகு, ஒரு ஸ்பூன் கடலைப்பருப்பு, இரண்டு காய்ந்த மிளகாய், சிறிதளவு கறிவேப்பிலை, 1/4 கப் சின்ன வெங்காயம், ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
வதங்கிய பின், ஒரு ஸ்பூன் மிளகாய் தூள் சேர்த்து கலந்து விட்டு, 300 கிராம் கத்தரிக்காயை தேவைக்கு ஏற்ப நறுக்கி இதனுடன் சேர்த்து, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து விட்டு அடுப்பை மெதுவாக வைத்து தண்ணீர் சேர்க்காமல் எண்ணெயில் நன்கு வதக்கவும்.
இறுதியாக, கொத்தமல்லி இலை சேர்த்து இறக்கவும்.
