அவல் பாசிப்பருப்பு பாயாசம்


தேவையான பொருட்கள் 

  • அவல் 
  • பாசிப்பருப்பு 
  • வெல்லம் 
  • நெய் 
  • தேங்காய் 
  • ஏலக்காய் 
  • முந்திரி 
  • உலர் திராட்சை 


செய்முறை 

100 கிராம் பாசிப்பருப்பை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.

இதனுடன், இரண்டு டம்ளர் தண்ணீர், தேவையான அளவு வெல்லம் சேர்த்து பத்து நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். 

பின், 50 கிராம் அவலை தண்ணீரில் நனைத்து தண்ணீரை வடித்து விட்டு இதனுடன் சேர்க்கவும். மேலும், 1/2 கப் தேங்காய்ப்பால், 25 கிராம் நெய்யில் வறுத்த முந்திரி மற்றும் உலர் திராட்சை, மூன்று ஏலக்காயை தட்டி சேர்த்து கலந்து விடவும்.

Previous Post Next Post