தேவையான பொருட்கள்
- வாழைப்பழம்
- மைதா
- தேங்காய்
- ஏலக்காய்
- உப்பு
- ரவை
- கருப்பட்டி
- சமையல் சோடா
- எண்ணெய்
செய்முறை
இரண்டு வாழைப்பழங்களை பொடியாக நறுக்கி அதனுடன் தேவையான அளவு கருப்பட்டி அல்லது நாட்டுச் சர்க்கரை சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
அதனுடன், ஒரு கப் மைதா, நான்கு ஸ்பூன் ரவை, ஒரு கப் துருவிய தேங்காய், ஒரு சிட்டிகை உப்பு, தேவையான அளவு தண்ணீர், 1/4 ஸ்பூனிற்கும் குறைவாக சமையல் சோடா சேர்த்து தோசை மாவு பதத்திலிருந்து கொஞ்சம் கெட்டியாக கரைத்து ஒரு மணி நேரம் வைக்கவும்.
பின், கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும், சிறிது சிறிதாக எண்ணெயில் போட்டு பொரிக்கவும்.
