வாழைப்பழம்-மைதா ஸ்வீட்

தேவையான பொருட்கள் 

  • வாழைப்பழம் 
  • மைதா 
  • தேங்காய் 
  • ஏலக்காய் 
  • உப்பு 
  • ரவை 
  • சர்க்கரை 
  • சமையல் சோடா 
  • எண்ணெய் 


செய்முறை 

இரண்டு வாழைப்பழங்களை பொடியாக நறுக்கி அதனுடன் தேவையான அளவு சர்க்கரை சேர்த்து அரைத்துக் கொள்ளவும். 

அதனுடன், ஒரு கப் மைதா, நான்கு ஸ்பூன் ரவை, ஒரு கப் துருவிய தேங்காய், ஒரு சிட்டிகை உப்பு, தேவையான அளவு தண்ணீர், 1/4 ஸ்பூனிற்கும் குறைவாக சமையல் சோடா சேர்த்து தோசை மாவு பதத்திலிருந்து கொஞ்சம் கெட்டியாக கரைத்து ஒரு மணி நேரம் வைக்கவும். 

பின், கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும், சிறிது சிறிதாக எண்ணெயில் போட்டு பொரிக்கவும்.


Previous Post Next Post