தேவையான பொருட்கள்
- இட்லி அரிசி
- பாசிப்பருப்பு
- அவல்
- உளுந்து பருப்பு
- வெந்தயம்
- நாட்டுச் சர்க்கரை
- நெய்
செய்முறை
ஒரு கப் இட்லி அரிசி, 1/4 கப்-க்கும் குறைவாக உளுந்து பருப்பு, இரண்டு ஸ்பூன் வெந்தயம் சேர்த்து ஆறு மணி நேரம் ஊற வைக்கவும்.
ஆறு மணி நேரம் ஊறிய பின், அரைக்கவும். அரிசி அரைந்த பின் இதனுடன், 1/2 மணி நேரம் ஊற வைத்த 1/4 கப் பாசிப்பருப்பு, 1/2 கப் அவல் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
பின், தேவையான அளவு நாட்டுச் சர்க்கரை சேர்த்து ஆறு மணி நேரம் வைக்கவும்.
பின்னர், பணியாரக் கல்லில் ஊற்றி தேவையான அளவு நெய் சேர்த்து வேக வைக்கவும்.
