பலாக்கொட்டை புளிக்குழம்பு

தேவையான பொருட்கள் 

  • பலாக்கொட்டை 
  • கத்தரிக்காய் 
  • புளி 
  • தக்காளி 
  • மிளகாய் தூள் 
  • சாம்பார் தூள் 
  • காய்ந்த மிளகாய் 
  • தேங்காய் 
  • மஞ்சள் தூள் 
  • பெருங்காயத்தூள் 
  • சின்ன வெங்காயம் 
  • கடுகு 
  • வெந்தயம் 
  • கடலைப்பருப்பு
  • நல்லெண்ணெய் 
  • கறிவேப்பிலை 
  • கொத்தமல்லி இலை 
  • உப்பு 


செய்முறை 

100 கிராம் பலாக்கொட்டையை தோலை நீக்கிவிட்டு இரண்டு துண்டுகளாக வெட்டி வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். 

கடாயில், ஐந்து ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ஒரு ஸ்பூன் கடுகு, ஒரு ஸ்பூன் வெந்தயம், ஒரு ஸ்பூன் கடலைப்பருப்பு, இரண்டு காய்ந்த மிளகாய், சிறிதளவு கறிவேப்பிலை, 1/4 கப் சின்ன வெங்காயம், ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும். 

வதங்கிய பின், பொடியாக நறுக்கிய ஒரு தக்காளி, ஒரு ஸ்பூன் மிளகாய் தூள், ஒரு ஸ்பூன் சாம்பார் தூள் சேர்த்து வதக்கவும். 

பின், வேக வைத்துள்ள பலாக்கொட்டை, பொடியாக நறுக்கிய இரண்டு கத்திரிக்காய் சேர்த்து ஐந்து நிமிடம் வதக்கவும். இதனுடன், 1/2 கப் புளிக்கரைசல், ஒரு டம்ளர் தண்ணீர், தேவையான அளவு உப்பு, 1/2 ஸ்பூன் பெருங்காயத்தூள் சேர்த்து அடுப்பை மெதுவாக வைத்து பத்து நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். 

இறுதியாக, 1/2 கப் துருவிய தேங்காயுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைத்து இதனுடன் சேர்த்து கலந்து விடவும். பின், கொதிக்க தொடங்கியவுடன் கொத்தமல்லி இலை சேர்த்து இறக்கவும்.


Previous Post Next Post