பலாக்கொட்டை சாம்பார்

தேவையான பொருட்கள் 

  • பலாக்கொட்டை 
  • துவரம் பருப்பு 
  • தக்காளி 
  • கத்தரிக்காய் 
  • புளி
  • சாம்பார் தூள் 
  • மிளகாய் தூள் 
  • மஞ்சள் தூள் 
  • சின்ன வெங்காயம் 
  • காய்ந்த மிளகாய் 
  • நல்லெண்ணெய் 
  • கடுகு 
  • வெந்தயம் 
  • உளுந்து பருப்பு 
  • கடலைப்பருப்பு 
  • பெருங்காயத்தூள் 
  • கறிவேப்பிலை 
  • கொத்தமல்லி இலை 
  • உப்பு 


செய்முறை

முதலில், 100 கிராம் துவரம் பருப்பு மற்றும் 100 கிராம் பலாக்கொட்டையை தோலை நீக்கிவிட்டு இரண்டு துண்டுகளாக வெட்டி இரண்டையும் தனித்தனியே வேகவைத்து எடுத்துக் கொள்ளவும். 

பின், கடாயில் 25 மில்லி நல்லெண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ஒரு ஸ்பூன் கடுகு, 1/2 ஸ்பூன் வெந்தயம், 1/2 ஸ்பூன் உளுந்து பருப்பு, ஒரு ஸ்பூன் கடலைப்பருப்பு, இரண்டு காய்ந்த மிளகாய், சிறிதளவு கறிவேப்பிலை, 1/4 கப் சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும். 

வதங்கிய பின், பொடியாக நறுக்கிய இரண்டு தக்காளி, ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும். 

பின்னர், வேக வைத்துள்ள பலாக்கொட்டை, இரண்டு பொடியாக நறுக்கிய கத்திரிக்காய் சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும். அடுத்ததாக, ஒரு நெல்லிக்காய் அளவு புளியை ஊற வைத்து கரைத்து புளிக்கரைசலை இதனுடன் சேர்க்கவும். மேலும், இரண்டு ஸ்பூன் சாம்பார் தூள், ஒரு ஸ்பூன் மிளகாய் தூள் சேர்த்து கொதிக்க தொடங்கியவுடன், வேக வைத்துள்ள  துவரம் பருப்பு, தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர், தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து விட்டு பத்து நிமிடம் கொதிக்க வைக்கவும். 

இறுதியாக, 1/2 ஸ்பூன் பெருங்காயத்தூள், சிறிதளவு கொத்தமல்லி இலை சேர்த்து இறக்கவும்.

Previous Post Next Post