தேவையான பொருட்கள்
- கொள்ளு பருப்பு
- உளுந்து பருப்பு
- வெந்தயம்
- அவல்
- உப்பு
- நல்லெண்ணெய்
செய்முறை
ஒரு கப் கொள்ளு பருப்பு, 1/4 கப் உளுந்து பருப்பு, இரண்டு ஸ்பூன் வெந்தயம் சேர்த்து 5 மணி நேரம் ஊற வைக்கவும்.
இதனுடன், 1/4 கப் அவல் சேர்த்து அரைக்கவும்.
பின், தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து விட்டு 5 மணி நேரம் வைத்து, பின்னர், தோசைக் கல்லில் ஊற்றி தேவையான அளவு நல்லெண்ணெய் சேர்த்து வேக வைக்கவும்.
