தேவையான பொருட்கள்
- உளுந்தம் பருப்பு
- அரிசி மாவு
- பெரிய வெங்காயம்
- சீரகம்
- பச்சை மிளகாய்
- கறிவேப்பிலை
- கொத்தமல்லி இலை
- இஞ்சி
- உப்பு
- எண்ணெய்
செய்முறை
100 கிராம் உளுந்தம் பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைத்து அரைத்துக் கொள்ளவும்.
பின், 50 கிராம் அரிசி மாவு, இரண்டு நீளமாக நறுக்கிய பெரிய வெங்காயம், நான்கு பச்சை மிளகாய், ஒரு ஸ்பூன் சீரகம், சிறிதளவு கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை, பொடியாக நறுக்கிய இஞ்சி சிறிதளவு, தேவையான அளவு உப்பு, தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர் சேர்த்து போண்டா மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.
கடாயில், எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும், சிறிய சிறிய போண்டாவாக எண்ணெயில் போட்டு வேக வைக்கவும்.
