கருவாடு ஃப்ரை

தேவையான பொருட்கள் 

  • கருவாடு 
  • மிளகுத்தூள் 
  • மீன் சில்லி பொடி 
  • காஷ்மீரி மிளகாய் தூள் 
  • மஞ்சள் தூள் 
  • எண்ணெய் 
  • உப்பு 


செய்முறை 

100 கிராம் கருவாடு நறுக்கி எடுத்துக் கொள்ளவும். அதனுடன், ஒரு ஸ்பூன் மிளகுத்தூள், ஒரு ஸ்பூன் மீன் சில்லி பொடி, 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு ஸ்பூன் காஷ்மீரி மிளகாய் தூள், தேவைப்பட்டால் சிறிதளவு உப்பு, சிறிதளவு தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ளவும். 

கடாயில், 100 மில்லி எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், தயார் செய்து வைத்துள்ள கருவாடை அதில் சேர்த்து ஃப்ரை செய்து எடுக்கவும்.

Previous Post Next Post