தேவையான பொருட்கள்
- கம்பு
- இட்லி அரிசி
- உளுந்து பருப்பு
- வெந்தயம்
- உப்பு
செய்முறை
ஒரு கப் தோல் நீக்கிய கம்பு, 1/2 கப் இட்லி அரிசி, 1/4 கப் உளுந்து பருப்பு, இரண்டு ஸ்பூன் வெந்தயம் சேர்த்து ஆறு மணி நேரம் ஊற வைத்து அரைக்கவும்.
பின், தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து விட்டு ஐந்து மணி நேரம் வைக்கவும்.
இறுதியாக, இட்லி பாத்திரத்தில் ஊற்றி வேக வைக்கவும்.
