கம்பு பணியாரம்

தேவையான பொருட்கள் 

  • கம்பு 
  • இட்லி அரிசி 
  • உளுந்து பருப்பு 
  • வெந்தயம் 
  • உப்பு 
  • நல்லெண்ணெய்


செய்முறை 

ஒரு கப் தோல் நீக்கிய கம்பு, 1/2 கப் இட்லி அரிசி, 1/4 கப் உளுந்து பருப்பு, இரண்டு ஸ்பூன் வெந்தயம் சேர்த்து ஆறு மணி நேரம் ஊற வைத்து அரைக்கவும். 

பின், தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து விட்டு ஐந்து மணி நேரம் வைக்கவும்.

இறுதியாக, பணியாரக்கல்லில் ஊற்றி தேவையான அளவு நல்லெண்ணெய் சேர்த்து வேக வைக்கவும்.

Previous Post Next Post