தேங்காய் ஒப்புட்டு


தேவையான பொருட்கள்

  • மைதா 
  • தேங்காய் 
  • சர்க்கரை
  • ஏலக்காய் பொடி 
  • சமையல் சோடா 
  • உப்பு 
  • எண்ணெய் 


செய்முறை 

200 கிராம் மைதா மாவுடன் 1/4 ஸ்பூனிற்கும் குறைவாக சமையல் சோடா, 1/4 ஸ்பூன் உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திலிருந்து கொஞ்சம் இளக்கமாக பிசைந்து கொள்ளவும். 

கடாயில், ஒரு கப் துருவிய தேங்காய், 1/4 கப் சர்க்கரை சேர்த்து சர்க்கரை உருகும் வரை கலந்து விடவும். அதனுடன்,  1/4 ஸ்பூன் ஏலக்காய் பொடி சேர்த்து கலந்து விட்டு இறக்கவும். 

பின்னர், தயார் செய்து வைத்துள்ள மாவை சிறிய உருண்டைகளாக பிடித்து விரித்து விட்டு அதில், தயார் செய்து வைத்துள்ள தேங்காயை வைத்து பின், மடித்து மறுபடியும் தேய்த்துக் கொள்ளவும். 

இறுதியாக, தோசைக் கல்லில் போட்டு தேவையான அளவு எண்ணெய் சேர்த்து வேக வைக்கவும்.

Previous Post Next Post