தேவையான பொருட்கள்
- மைதா
- கடலைப்பருப்பு
- நாட்டுச் சர்க்கரை
- ஏலக்காய் பொடி
- சமையல் சோடா
- உப்பு
- எண்ணெய்
செய்முறை
200 கிராம் மைதா மாவுடன் 1/4 ஸ்பூனிற்கும் குறைவாக சமையல் சோடா, 1/4 ஸ்பூன் உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திலிருந்து கொஞ்சம் இளக்கமாக பிசைந்து கொள்ளவும்.
100 கிராம் கடலைப்பருப்பை நன்கு வேக வைத்து, அதனுடன் 50 கிராம் நாட்டுச் சர்க்கரை மற்றும் 1/4 ஸ்பூன் ஏலக்காய் பொடி சேர்த்து மசித்து எடுத்துக் கொள்ளவும்.
பின்னர், தயார் செய்து வைத்துள்ள மாவை சிறிய உருண்டைகளாக பிடித்து விரித்து விட்டு அதில், மசித்து வைத்துள்ள கடலைப்பருப்பு வைத்து பின், மடித்து மறுபடியும் தேய்த்துக் கொள்ளவும்.
இறுதியாக, தோசைக் கல்லில் போட்டு தேவையான அளவு எண்ணெய் சேர்த்து வேக வைக்கவும்.
