தேவையான பொருட்கள்
- சின்ன நெல்லிக்காய்
- தக்காளி
- சின்ன வெங்காயம்
- காய்ந்த மிளகாய்
- பூண்டு
- மிளகு
- சீரகம்
- பெருங்காயத்தூள்
- மஞ்சள் தூள்
- கடுகு
- நல்லெண்ணெய்
- உப்பு
- கறிவேப்பிலை
- கொத்தமல்லி இலை
செய்முறை
விதையை நீக்கிய 1/4 கப் நெல்லிக்காயை அரைத்து, வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.
ஒரு ஸ்பூன் சீரகம், ஒரு ஸ்பூன் மிளகு, நான்கு பல் பூண்டு சேர்த்து தட்டி எடுத்துக் கொள்ளவும்.
கடாயில், நான்கு ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ஒரு ஸ்பூன் கடுகு, இரண்டு காய்ந்த மிளகாய், சிறிதளவு கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய நான்கு சின்ன வெங்காயம், 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
வதங்கிய பின், பொடியாக நறுக்கிய ஒரு தக்காளி சேர்ந்து வதக்கவும்.
பின், தயார் செய்து வைத்துள்ள நெல்லிக்காய் சாறு, இரண்டு டம்ளர் தண்ணீர், தேவையான அளவு உப்பு, தட்டி வைத்துள்ள பூண்டு-சீரகம், சிறிதளவு கொத்தமல்லி இலை, 1/2 ஸ்பூன் பெருங்காயத்தூள் சேர்த்து கொதிக்கத் தொடங்கியவுடன் கலந்து விட்டு இறக்கவும்.
