சின்ன நெல்லிக்காய் சாதம்


தேவையான பொருட்கள் 

  • நெல்லிக்காய் 
  • சாதம் 
  • சின்ன வெங்காயம் 
  • காய்ந்த மிளகாய் 
  • கடுகு 
  • கடலைப்பருப்பு 
  • மஞ்சள் தூள் 
  • நல்லெண்ணெய் 
  • உப்பு 
  • கறிவேப்பிலை 
  • கொத்தமல்லி இலை 


செய்முறை 

கடாயில், ஐந்து ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ஒரு ஸ்பூன் கடுகு, ஒரு ஸ்பூன் கடலைப்பருப்பு, நான்கு காய்ந்த மிளகாய், 1/4 கப் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். 

வதங்கிய பின், 1/4 கப் சின்ன நெல்லிக்காயை விதையை நீக்கிவிட்டு பொடியாக நறுக்கி சேர்க்கவும். மேலும், 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கவும். 

பின்னர், ஒரு கப் சாதம், தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து விடவும். 

இறுதியாக, சிறிதளவு கொத்தமல்லி இலை சேர்த்து கலந்து விட்டு இறக்கவும்.

Previous Post Next Post