தேவையான பொருட்கள்
- சிக்கன்
- பெரிய வெங்காயம்
- பச்சை மிளகாய்
- தக்காளி
- தனியா தூள்
- மிளகாய் தூள்
- மஞ்சள் தூள்
- மிளகுத்தூள்
- கறி மசாலா தூள்
- சிக்கன் மசாலா தூள்
- சோம்பு
- இஞ்சி-பூண்டு விழுது
- உப்பு
- நல்லெண்ணெய்
- கறிவேப்பிலை
- கொத்தமல்லி இலை
செய்முறை
கடாயில், 20 மில்லி நல்லெண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ஒரு ஸ்பூன் சோம்பு, 1/4 கப் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், பொடியாக நறுக்கிய நான்கு பச்சை மிளகாய், ஒரு ஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது, சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
வதங்கிய பின், பொடியாக நறுக்கிய ஒரு தக்காளி, ஒரு ஸ்பூன் தனியா தூள், ஒரு ஸ்பூன் மிளகாய் தூள், 1/4 ஸ்பூன் கறி மசாலா தூள், 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு ஸ்பூன் சிக்கன் மசாலா தூள் சேர்த்து வதக்கவும்.
பின்னர், 300 கிராம் சிக்கன் கொத்து கறி, தேவையான அளவு உப்பு சேர்த்து ஐந்து நிமிடம் வதக்கவும்.
மேலும், 1/2 டம்ளர் தண்ணீர் சேர்த்து அடுப்பை மீடியம் ஃப்ளேமில் வைத்து தண்ணீர் சுண்டி வரும் வரை வேக வைக்கவும்.
இறுதியாக, ஒரு ஸ்பூன் மிளகுத்தூள், சிறிதளவு கொத்தமல்லி இலை சேர்த்து கலந்து விட்டு இறக்கவும்.
