தேவையான பொருட்கள்
- மைதா
- முட்டை
- சர்க்கரை
- உப்பு
- எண்ணெய்
செய்முறை
முதலில், 300 கிராம் மைதா, ஒரு ஸ்பூன் சர்க்கரை, தேவையான அளவு உப்பு, ஒரு முட்டை சேர்த்து கலந்து விட்டு கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர், 20 மில்லி எண்ணெய் சேர்த்து பிசைந்து இரண்டு மணி நேரம் வைக்கவும்.
பின், சிறிய உருண்டைகளாக பிடித்து, விரித்து விட்டு சதுரமாக மடித்து, தோசை கல்லில் போட்டு, தேவையான அளவு எண்ணெய் சேர்த்து பொன்னிறமாக வேக வைக்கவும்.
