தேவையான பொருட்கள்
- ரவை
- பாசிப்பருப்பு
- தயிர்
- உப்பு
- எண்ணெய்
செய்முறை
கடாயில், 25 மில்லி எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன் 50 கிராம் பாசிப்பருப்பு சேர்த்து ஒரு நிமிடம் மட்டும் வறுக்கவும். அதனுடன், 150 கிராம் ரவை சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.
ஆறிய பின், 100 மில்லி தயிர், தேவையான அளவு உப்பு சேர்த்து இட்லி மாவு பதத்திலிருந்து கொஞ்சம் கெட்டியாக கலந்து 30 நிமிடம் வைக்கவும்.
பின், இட்லி பாத்திரத்தில் ஊற்றி வேக வைக்கவும்.
