தேவையான பொருட்கள்
- ரவை
- நெய்
- கேரட்
- முந்திரி
- நாட்டுச் சர்க்கரை
- பால்
- ஏலக்காய் பொடி
செய்முறை
கடாயில், நான்கு ஸ்பூன் நெய், ஒரு கப் துருவிய கேரட், 50 கிராம் முந்திரி சேர்த்து ஐந்து நிமிடம் வறுக்கவும். பின், ஒரு கப் ரவை சேர்த்து ஐந்து நிமிடம் வறுக்கவும்.
ஆறிய பின், இதனுடன் 1/2 கப் நாட்டுச் சர்க்கரை, 1/4 ஸ்பூன் ஏலக்காய் பொடி, தேவையான அளவு பால் சேர்த்து தோசை மாவு படத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.
பின், தோசைக் கல்லில் ஊற்றி தேவையான அளவு நெய் சேர்த்து வேக வைக்கவும்.
