கம்பு வெஜிடபிள் இட்லி


தேவையான பொருட்கள் 

  • கம்பு 
  • இட்லி அரிசி 
  • உளுந்து பருப்பு 
  • வெந்தயம் 
  • கேரட் 
  • பீன்ஸ் 
  • பச்சை பட்டாணி
  • உப்பு 
  • நெய் 


செய்முறை 

ஒரு கப் தோல் நீக்கிய கம்பு, 1/2 கப் இட்லி அரிசி, 1/4 கப் உளுந்து பருப்பு, இரண்டு ஸ்பூன் வெந்தயம் சேர்த்து ஆறு மணி நேரம் ஊற வைத்து அரைக்கவும். 

பின், தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து விட்டு ஐந்து மணி நேரம் வைக்கவும்.

கடாயில், நான்கு ஸ்பூன் நெய், கேரட், பீன்ஸ், பச்சை பட்டாணி மூன்றும் சேர்த்து ஒரு கப் அளவு சேர்த்து நெய்யில் வதக்கி தயார் செய்து வைத்துள்ள மாவுடன் சேர்க்கவும். 

இறுதியாக, இட்லி பாத்திரத்தில் ஊற்றி வேக வைக்கவும்.

Previous Post Next Post