தேவையான பொருட்கள்
- கோதுமை மாவு
- கேரட்
- பீன்ஸ்
- பச்சை மிளகாய்
- கடலைப்பருப்பு
- சீரகம்
- பெரிய வெங்காயம்
- உப்பு
- நல்லெண்ணெய்
- கறிவேப்பிலை
- கொத்தமல்லி இலை
செய்முறை
கடாயில், ஐந்து ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ஒரு ஸ்பூன் சீரகம், நான்கு ஸ்பூன் கடலைப்பருப்பு, சிறிதளவு கறிவேப்பிலை, ஒரு பெரிய வெங்காயம், பொடியாக நறுக்கிய நான்கு பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
பின், பொடியாக நறுக்கிய 1/2 கப் கேரட்-பீன்ஸ் சேர்த்து நன்கு வதக்கவும்.
ஆறிய பின், இதனுடன் ஒரு கப் கோதுமை மாவு, தேவையான அளவு உப்பு, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திலிருந்து கொஞ்சம் இளக்கமாக பிசைந்து கொள்ளவும்.
பின், தோசை கல்லில் வைத்து விரித்து விட்டு தேவையான அளவு எண்ணெய் சேர்த்து வேக வைக்கவும்.
