மட்டன் மசாலா


தேவையான பொருட்கள் 

  • மட்டன் 
  • பெரிய வெங்காயம் 
  • தக்காளி 
  • தேங்காய் 
  • சோம்பு 
  • இஞ்சி-பூண்டு விழுது 
  • காய்ந்த மிளகாய் 
  • பச்சை மிளகாய் 
  • தனியா தூள் 
  • மிளகுத்தூள் 
  • கறி மசாலா தூள் 
  • மட்டன் மசாலா தூள் 
  • மிளகாய் தூள் 
  • மஞ்சள் தூள் 
  • உப்பு 
  • நல்லெண்ணெய் 
  • கறிவேப்பிலை
  • கொத்தமல்லி இலை

செய்முறை 

கடாயில், ஐந்து ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ஒரு ஸ்பூன் சோம்பு, ஒரு பெரிய வெங்காயம், ஒரு தக்காளி, இரண்டு காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கவும். 

வதங்கிய பின், இரண்டு ஸ்பூன் தனியா தூள், 1/4 கப் துருவிய தேங்காய் சேர்த்து கலந்து விட்டு ஆறிய பின் அரைக்கவும். 

குக்கரில், 20 மில்லி நல்லெண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ஒரு ஸ்பூன் சோம்பு, பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம், இரண்டு பச்சை மிளகாய், சிறிதளவு கறிவேப்பிலை, இரண்டு ஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். 

பின், 500 கிராம் மட்டன், ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள், சிறிதளவு கறிவேப்பிலை, ஒரு ஸ்பூன் மிளகாய் தூள், ஒரு ஸ்பூன் சிக்கன் மசாலா தூள், 1/4 ஸ்பூன் கறி மசாலா தூள் சேர்த்து ஐந்து நிமிடம் வதக்கவும். 

பின்னர், அரைத்து வைத்துள்ள மசாலா, இரண்டு டம்ளர் தண்ணீர், தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து விட்டு நான்கு விசில் விடவும். 

இறுதியாக, ஒரு ஸ்பூன் மிளகுத்தூள், சிறிதளவு கொத்தமல்லி இலை சேர்த்து கலந்து விடவும்.
Previous Post Next Post