தேவையான பொருட்கள்
- ரவை
- மைதா
- சர்க்கரை
- நெய்
- டூட்டி ஃப்ரூட்டி
- ஏலக்காய் பொடி
செய்முறை
கடாயில், இரண்டு ஸ்பூன் நெய், 200 கிராம் ரவை சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
அதே கடாயில், 300 மில்லி தண்ணீர் சேர்த்து தண்ணீர் கொதிக்க தொடங்கியவுடன், 100 கிராம் சர்க்கரை, வறுத்து வைத்துள்ள ரவையை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து நன்கு கலந்து விடவும்.
ரவை வெந்தவுடன், 50 கிராம் டூட்டி ஃப்ரூட்டி, 1/4 ஸ்பூன் ஏலக்காய் பொடி, நான்கு ஸ்பூன் நெய் சேர்த்து இறுகும் வரை நன்கு கலந்து விடவும்.
இறுதியாக, தயார் செய்து வைத்துள்ள ரவையை ஒரு தட்டில் மாற்றி விரித்து விட்டு, ஆறிய பின் சிறிய துண்டுகளாக வெட்டவும்.
