தேவையான பொருட்கள்
- ரவை
- அரிசி மாவு
- பெரிய வெங்காயம்
- பாசிப்பருப்பு
- பச்சை மிளகாய்
- தேங்காய்
- கடுகு
- உப்பு
- கறிவேப்பிலை
- கொத்தமல்லி இலை
- எண்ணெய்
செய்முறை
கடாயில், இரண்டு ஸ்பூன் எண்ணெய், ஒரு கப் ரவை, 1/2 கப் அரிசி மாவு சேர்த்து இரண்டு நிமிடம் வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
பின், அதே கடாயில், ஐந்து ஸ்பூன் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ஒரு ஸ்பூன் கடுகு, ஐந்து ஸ்பூன் பாசிப்பருப்பு, சிறிதளவு கறிவேப்பிலை, 1/4 கப் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், பொடியாக நறுக்கிய நான்கு பச்சை மிளகாய், 1/2 கப் துருவிய தேங்காய் சேர்த்து வதக்கவும். மேலும் இதனுடன் வறுத்து வைத்துள்ள ரவையை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
இதனுடன் தேவையான அளவு உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து இறுக்கமாக பிசைந்து கொள்ளவும்.
பின், பிடி கொழுக்கட்டைகளாக பிரித்து இட்லி பாத்திரத்தில் வைத்து வேக வைக்கவும்.
