வெள்ளை பூசணிக்காய் துவையல்


தேவையான பொருட்கள் 

  • வெள்ளை பூசணிக்காய்
  • காய்ந்த மிளகாய் 
  • சீரகம்
  • தக்காளி 
  • தேங்காய்
  • புளி
  • உப்பு 
  • கொத்தமல்லி இலை 
  • கறிவேப்பிலை 
  • நல்லெண்ணெய் 

செய்முறை 

கடாயில், ஐந்து ஸ்பூன் நல்லெண்ணெய், 1/4 கப் தோல் நீக்கி பொடியாக நறுக்கிய வெள்ளை பூசணிக்காய், ஒரு தக்காளி, ஒரு ஸ்பூன் சீரகம், சிறிதளவு புளி, நான்கு காய்ந்த மிளகாய், சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும். 

பின், 1/4 கப் துருவிய தேங்காய், சிறிதளவு கொத்தமல்லி இலை சேர்த்து கலந்து விட்டு இறக்கவும். 

ஆறிய பின், அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
Previous Post Next Post