தேவையான பொருட்கள்
- சுரைக்காய்
- காய்ந்த மிளகாய்
- சீரகம்
- தக்காளி
- தேங்காய்
- புளி
- உப்பு
- கொத்தமல்லி இலை
- கறிவேப்பிலை
- நல்லெண்ணெய்
செய்முறை
கடாயில், ஐந்து ஸ்பூன் நல்லெண்ணெய், 1/4 கப் தோல் நீக்கி பொடியாக நறுக்கிய சுரைக்காய், ஒரு தக்காளி, ஒரு ஸ்பூன் சீரகம், சிறிதளவு புளி, நான்கு காய்ந்த மிளகாய், சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்.
பின், 1/4 கப் துருவிய தேங்காய், சிறிதளவு கொத்தமல்லி இலை சேர்த்து கலந்து விட்டு இறக்கவும்.
ஆறிய பின், அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
