தேவையான பொருட்கள்
- கம்பு
- இட்லி அரிசி
- உளுந்து பருப்பு
- வெந்தயம்
- கேரட்
- பீன்ஸ்
- பெரிய வெங்காயம்
- உப்பு
- நெய்
- எண்ணெய்
செய்முறை
ஒரு கப் தோல் நீக்கிய கம்பு, 1/2 கப் இட்லி அரிசி, 1/4 கப் உளுந்து பருப்பு, இரண்டு ஸ்பூன் வெந்தயம் சேர்த்து ஆறு மணி நேரம் ஊற வைத்து அரைக்கவும்.
பின், தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து விட்டு ஐந்து மணி நேரம் வைக்கவும்.
கடாயில், நான்கு ஸ்பூன் நெய், பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம், கேரட்-பீன்ஸ் 1/2 கப் சேர்த்து நெய்யில் வதக்கி தயார் செய்து வைத்துள்ள மாவுடன் சேர்க்கவும்.
இறுதியாக, பணியாரக்கல்லில் ஊற்றி தேவையான அளவு எண்ணெய் சேர்த்து வேக வைக்கவும்.
