தேவையான பொருட்கள்
- அரிசி மாவு
- உளுந்து மாவு
- வெண்ணெய்
- எள்
- ஓமம்
- சீரகம்
- பெருங்காயத்தூள்
- உப்பு
- எண்ணெய்
செய்முறை
ஒரு கப் பச்சரிசி மாவு, நான்கு ஸ்பூன் உளுந்து மாவு, ஒரு ஸ்பூன் சீரகம், ஒரு ஸ்பூன் ஓமம், ஒரு ஸ்பூன் எள், 1/2 ஸ்பூன் பெருங்காயத்தூள், 25 கிராம் வெண்ணெய், தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து விடவும்.
பின், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.
பிசைந்து வைத்துள்ள மாவை முறுக்கு அச்சில் போட்டு பிழிந்து எடுத்துக் கொள்ளவும்.
கடாயில், எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், மிதமான சூட்டில் அடுப்பை மெதுவாக வைத்து பிழிந்து வைத்துள்ள முறுக்கு மாவை எண்ணெயில் போட்டு பாதி அளவு மட்டும் வேக வைத்து எடுக்கவும்.
பின்னர், பாதி அளவு வேக வைத்து வைத்துள்ள முறுக்கை 5 நிமிடம் கழித்து மீண்டும் எண்ணெயில் சேர்த்து பொன்னிறமாக வருமாறு பொரித்து எடுக்கவும்.
