தேவையான பொருட்கள்
- பால்
- பால்கோவா
- சர்க்கரை
- வெண்ணிலா ஐஸ்கிரீம்
- பாதாம் பிசின்
செய்முறை
4 பாதாம் பிசினை எட்டு மணி நேரம் ஊற வைத்து எடுத்துக் கொள்ளவும்.
பாத்திரத்தில், 50 கிராம் சர்க்கரை சேர்த்து அடுப்பை மெதுவாக வைத்து கேரமல் செய்து கொள்ளவும். சர்க்கரை கரைந்து நன்கு பொங்கி வரும் போது, 1/4 டம்ளர் தண்ணீர் சேர்த்து கலந்து விட்டு இறக்கவும்.
பின், அடி கனமான பாத்திரத்தில் ஒரு லிட்டர் பால், பால் சூடானவுடன் அடுப்பை மெதுவாக வைத்து பால் பாதி அளவு ஆகும் வரை கலந்து விடவும்.
பின்னர், இதனுடன் 25 கிராம் பால் கோவாவை பொடித்து விட்டு கலந்து விடவும். மேலும், தயார் செய்து வைத்துள்ள கேரமலில் பாதி அளவு சேர்த்து கலந்து விடவும். தேவைப்பட்டால் சர்க்கரை சேர்த்துக் கலந்து விட்டு இறக்கவும்.
இதனை ஆற வைத்து, இரண்டு மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்துக் கொள்ளவும்.
இதனுடன், நான்கு ஸ்பூன் ஊற வைத்துள்ள பாதாம் பிசின், இரண்டு ஸ்கூப் வெண்ணிலா ஐஸ்கிரீம் சேர்க்கவும்.
