தேவையான பொருட்கள்
- ரவை
- ஜவ்வரிசி
- சர்க்கரை
- ஏலக்காய்
- முந்திரி
- நெய்
- கேசரி பவுடர்
- எண்ணெய்
செய்முறை
ஒரு கப் ஜவ்வரிசியுடன் இரண்டு கப் தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும். வெந்தவுடன், ஒரு கப் தண்ணீர், 1/4 ஸ்பூன் கேசரி பவுடர் சேர்த்து கொதிக்க தொடங்கியவுடன் ஒரு கப் வறுத்த ரவை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கலந்து விடவும்.
இதனுடன், ஒரு கப் சர்க்கரை சேர்த்து இறுகும் வரை நன்கு கலந்து விடவும்.
இதனுடன், நான்கு ஸ்பூன் எண்ணெய் கலந்து விடும் பொழுது இடையே சேர்க்கவும்.
பின், 1/4 கப் நெய்யில் வறுத்த முந்திரி, இரண்டு ஏலக்காய் தட்டி சேர்க்கவும்.
இறுதியாக, தேவையான அளவு நெய் சேர்த்து கலந்து விட்டு இறக்கவும்.
