தேவையான பொருட்கள்
- முட்டை
- பெரிய வெங்காயம்
- பச்சை மிளகாய்
- தக்காளி
- தேங்காய்
- இஞ்சி-பூண்டு விழுது
- கறி மசாலா தூள்
- முட்டை மசாலா தூள்
- மிளகாய் தூள்
- மஞ்சள் தூள்
- மிளகுத்தூள்
- சோம்பு
- நல்லெண்ணெய்
- உப்பு
- கறிவேப்பிலை
- கொத்தமல்லி இலை
செய்முறை
கடாயில், நான்கு ஸ்பூன் எண்ணெய், ஐந்து முட்டையை உடைத்து ஊற்றவும். அதனுடன், ஒரு ஸ்பூன் மிளகுத்தூள் சேர்த்து பொரித்து எடுத்துக் கொள்ளவும்.
அதே கடாயில், ஐந்து ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ஒரு ஸ்பூன் சோம்பு, சிறிதளவு கறிவேப்பிலை, ஒரு பெரிய வெங்காயம், ஒரு ஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது, இரண்டு பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
வதங்கிய பின், பொடியாக நறுக்கிய ஒரு தக்காளி, 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள், 1/2 ஸ்பூன் கறி மசாலா தூள், ஒரு ஸ்பூன் மிளகாய் தூள், ஒரு ஸ்பூன் முட்டை மசாலா தூள் சேர்த்து வதக்கவும்.
மேலும், ஒரு கப் அரைத்த தேங்காய் மற்றும் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்க்கவும்.
கொதிக்க தொடங்கியவுடன், பொரித்து வைத்துள்ள முட்டை, தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து விட்டு சிறிதளவு கொத்தமல்லி இலை சேர்த்து இறக்கவும்.
