தேவையான பொருட்கள்
- கேரட்
- பீன்ஸ்
- தேங்காய்
- தக்காளி
- காய்ந்த மிளகாய்
- சாம்பார் தூள்
- மிளகாய் தூள்
- பெரிய வெங்காயம்
- மஞ்சள் தூள்
- கடுகு
- கடலைப்பருப்பு
- உப்பு
- கறிவேப்பிலை
- கொத்தமல்லி இலை
- எண்ணெய்
செய்முறை
கடாயில், ஐந்து ஸ்பூன் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ஒரு ஸ்பூன் கடுகு, ஒரு ஸ்பூன் கடலைப்பருப்பு, இரண்டு காய்ந்த மிளகாய், ஒரு பெரிய வெங்காயம், கறிவேப்பிலை, 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
வதங்கிய பின், ஒரு கப் பொடியாக நறுக்கிய கேரட்-பீன்ஸ், ஒரு ஸ்பூன் மிளகாய் தூள், இரண்டு ஸ்பூன் சாம்பார் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து ஐந்து நிமிடம் வதக்கவும்.
பின்னர், 1/2 கப் அரைத்த தேங்காய், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்.
இறுதியாக, கொத்தமல்லி இலை சேர்த்து இறக்கவும்.
