மசாலா பொடி இல்லாத சிக்கன் சில்லி


தேவையான பொருட்கள் 

  • சிக்கன் 
  • இஞ்சி 
  • பூண்டு 
  • மிளகு 
  • வர மல்லி 
  • சோம்பு 
  • காய்ந்த மிளகாய் 
  • மஞ்சள் தூள் 
  • கடலை மாவு 
  • சோள மாவு 
  • எலுமிச்சை சாறு 
  • முட்டை
  • உப்பு 
  • கொத்தமல்லி இலை
  • புதினா
  • எண்ணெய் 


செய்முறை 

முதலில், ஐந்து பல் பூண்டு, பொடியாக நறுக்கிய இஞ்சி ஒரு ஸ்பூன், இரண்டு ஸ்பூன் மிளகு, ஒரு ஸ்பூன் வர மல்லி, ஒரு ஸ்பூன் சோம்பு, ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள், இரண்டு ஸ்பூன் எலுமிச்சை சாறு, ஆறு காய்ந்த மிளகாய், சிறிதளவு கொத்தமல்லி இலை, புதினா, தேவையான அளவு உப்பு, சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். 

பின், 500 கிராம் எலும்பில்லாத சிக்கனுடன் நான்கு ஸ்பூன் கடலை மாவு, நான்கு ஸ்பூன் சோள மாவு, அரைத்து வைத்துள்ள விழுது, ஒரு முட்டை உடைத்து ஊற்றி கலந்து விட்டு 30 நிமிடம் வைக்கவும். 

பின்னர், எண்ணெயில் போட்டு பொரிக்கவும்.

Previous Post Next Post