தஞ்சாவூர் ஒரப்பு அடை


தேவையான பொருட்கள் 

  • இட்லி அரிசி 
  • பச்சரிசி 
  • கடலைப்பருப்பு 
  • துவரம் பருப்பு 
  • உளுந்து பருப்பு 
  • சின்ன வெங்காயம் 
  • காய்ந்த மிளகாய் 
  • சோம்பு 
  • சுரைக்காய் 
  • தேங்காய் 
  • மஞ்சள் தூள் 
  • பெருங்காயத்தூள் 
  • உப்பு 
  • நல்லெண்ணெய் 
  • கறிவேப்பிலை 
  • கொத்தமல்லி இலை 


செய்முறை 

ஒரு கப் இட்லி அரிசி, ஒரு கப் பச்சரிசி, ஒரு கப் துவரம் பருப்பு, ஒரு கப் கடலை பருப்பு, ஒரு கப் உளுந்து பருப்பு சேர்த்து ஐந்து மணி நேரம் ஊற வைத்து அதனுடன், ஆறு காய்ந்த மிளகாய், ஒரு ஸ்பூன் சோம்பு, தேவையான அளவு உப்பு சேர்த்து கொரகொரப்பாக தோசை மாவு பதத்தில் இருந்து கொஞ்சம் கெட்டியாக அரைத்துக் கொள்ளவும். 

பின், அரைத்த மாவுடன், 1/4 கப் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், 1/4 கப் துருவிய சுரைக்காய், 1/4 கப் துருவிய தேங்காய், ஒரு ஸ்பூன் பெருங்காயத்தூள், பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை, 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து விட்டு ஒரு மணி நேரம் வைக்கவும்.

பின்னர், கடாயில் 25 மில்லி நல்லெண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், தயார் செய்து வைத்துள்ள மாவை தேவைக்கேற்ப அளவில் ஊற்றி வேக வைக்கவும்.

Previous Post Next Post