தேவையான பொருட்கள்
- தினை
- பெரிய வெங்காயம்
- காய்ந்த மிளகாய்
- கேரட்
- பீன்ஸ்
- தக்காளி
- இஞ்சி
- கடுகு
- உளுந்து பருப்பு
- கடலைப்பருப்பு
- மஞ்சள் தூள்
- நல்லெண்ணெய்
- கறிவேப்பிலை
- கொத்தமல்லி இலை
- உப்பு
செய்முறை
ஒரு கப் தோல் நீக்கிய தினை ஐந்து நிமிடம் வறுத்து ஒன்று-இரண்டாக அரைத்துக் கொள்ளவும்.
கடாயில், 25 மில்லி நல்லெண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ஒரு ஸ்பூன் கடுகு, ஒரு ஸ்பூன் உளுந்து பருப்பு, ஒரு ஸ்பூன் கடலைப்பருப்பு, ஐந்து காய்ந்த மிளகாய், சிறிதளவு கறிவேப்பிலை, 1/4 கப் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், பொடியாக நறுக்கிய ஒரு ஸ்பூன் இஞ்சி, ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
பின், பொடியாக நறுக்கிய ஒரு தக்காளி சேர்த்து வதக்கவும்.
பின்னர், 1/4 கப் பொடியாக நறுக்கிய கேரட்-பீன்ஸ் சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும். மேலும், இதனுடன் மூன்று கப் தண்ணீர், தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க தொடங்கியவுடன் தயார் செய்து வைத்துள்ள தினை சேர்த்து கலந்து விடவும்.
நன்கு கொதிக்க தொடங்கியவுடன் அடுப்பை மெதுவாக வைத்து தண்ணீர் இறுகும் வரை வேக வைக்கவும்.
இறுதியாக, சிறிதளவு கொத்தமல்லி இலை சேர்த்து 10 நிமிடம் மூடி வைக்கவும்.
