கருப்பட்டி லட்டு


தேவையான பொருட்கள் 

  • கடலை மாவு 
  • கருப்பட்டி 
  • நெய் 
  • ஏலக்காய் 
  • முந்திரி 
  • உலர் திராட்சை 
  • எண்ணெய் 
  • கேசரி பவுடர் 


செய்முறை 

பாத்திரத்தில், 200 கிராம் கடலை மாவுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.

பின், கரைத்து வைத்துள்ள கடலை மாவை பூந்தியாக எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்துக் கொள்ளவும். 

தயார் செய்து வைத்துள்ள பூந்தியை ஒன்று-இரண்டாக அரைத்துக் கொள்ளவும்.

மற்றொரு பாத்திரத்தில், 200‌ கிராம் பொடியாக்கிய கருப்பட்டி, 150 மில்லி தண்ணீர், 1/4 ஸ்பூன் கேசரி பவுடர் சேர்த்து பத்து நிமிடம் கொதிக்கவிட்டு பாகு காய்ச்சிக் கொள்ளவும். பாகு இறுக்கமாக இருக்கக் கூடாது. 

பாகு சூடாக இருக்கும் பொழுதே தயார் செய்து வைத்துள்ள பூந்தியில் கொஞ்சம் கொஞ்சமா சேர்த்து கலந்து விடவும். இதனுடன், தட்டிய மூன்று ஏலக்காய், 50 கிராம் நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்து கலந்து விட்டு ஆறிய பின் சிறிய உருண்டைகளாக பிடிக்கவும்.

Previous Post Next Post