தேவையான பொருட்கள்
- பொட்டுக்கடலை
- காய்ந்த மிளகாய்
- தேங்காய்
- பூண்டு
- நல்லெண்ணெய்
- உப்பு
- கறிவேப்பிலை
- கொத்தமல்லி இலை
செய்முறை
கடாயில், 1/4 கப் பொட்டுக்கடலை, இரண்டு பல் பூண்டு, ஐந்து காய்ந்த மிளகாய், 1/2 ஸ்பூன் நல்லெண்ணெய், சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.
ஆறிய பின், இதனுடன் 1/2 கப் துருவிய தேங்காய், தேவையான அளவு உப்பு, சிறிதளவு கொத்தமல்லி இலை, தண்ணீர் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கெட்டியாக அரைத்துக் கொள்ளவும்.
