தேவையான பொருட்கள்
- ரவை
- அரிசி மாவு
- பால்
- வெல்லம்
- ஏலக்காய் பொடி
- உப்பு
- நெய்
செய்முறை
கடாயில், இரண்டு ஸ்பூன் நெய், ஒரு கப் ரவை, 1/2 கப் அரிசி மாவு சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
இதனுடன் ஒரு சிட்டிகை உப்பு, தேவையான அளவு பால் சேர்த்து இறுக்கமாக பிசைந்து கொள்ளவும். பின், சிறிய உருண்டைகளாக பிடித்து இட்லி பாத்திரத்தில் வைத்து வேக வைக்கவும்.
பாத்திரத்தில், 500 மில்லி பால், 100 கிராம் பொடியாக்கிய வெல்லம் சேர்த்து பால் கொதிக்க தொடங்கியவுடன் அடுப்பை மெதுவாக வைத்து ஐந்து நிமிடம் கொதிக்க வைக்கவும்.
பின்னர், அடுப்பை நிறுத்திவிட்டு வேக வைத்துள்ள கொழுக்கட்டை உருண்டைகளை சேர்த்து அதனுடன் 1/4 ஸ்பூன் ஏலக்காய் பொடி, இரண்டு ஸ்பூன் நெய் சேர்த்து கலந்து விடவும்.
