ரவா பருப்பு பணியாரம்


தேவையான பொருட்கள்

  • ரவை 
  • பாசிப்பருப்பு 
  • தயிர் 
  • இட்லி பொடி
  • உப்பு 
  • எண்ணெய் 


செய்முறை 

கடாயில், 25 மில்லி எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன் 50 கிராம் பாசிப்பருப்பு சேர்த்து ஒரு நிமிடம் மட்டும் வறுக்கவும். அதனுடன், 150 கிராம் ரவை சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும். 

ஆறிய பின், 100 மில்லி தயிர், தேவையான அளவு உப்பு, நான்கு ஸ்பூன் இட்லி பொடி சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கலந்து 30 நிமிடம் வைக்கவும். 

பின், பணியாரக்கல்லில் ஊற்றி தேவையான அளவு எண்ணெய் சேர்த்து வேக வைக்கவும்.

Previous Post Next Post