தேவையான பொருட்கள்
- முட்டைகோஸ்
- சாதம்
- பெரிய வெங்காயம்
- இஞ்சி
- பூண்டு
- பச்சை மிளகாய்
- கறி மசாலா தூள்
- சோம்பு
- உப்பு
- எண்ணெய்
- கறிவேப்பிலை
- கொத்தமல்லி இலை
செய்முறை
கடாயில், 20 மில்லி எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ஒரு ஸ்பூன் சோம்பு, பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம், இரண்டு பச்சை மிளகாய், 1/4 ஸ்பூன் கறி மசாலா தூள், சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
வதங்கிய பின், 1/2 கப் பொடியாக நறுக்கிய முட்டைகோஸ், 1/4 டம்ளர் தண்ணீர் சேர்த்து தண்ணீர் சுண்டி வரும் வரை நன்கு வதக்கவும்.
பின், ஒரு கப் சாதம், தேவையான அளவு உப்பு, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து கலந்து விட்டு இறக்கவும்.
