வெங்காய-மிளகாய் சட்னி


தேவையான பொருட்கள் 

  • பெரிய வெங்காயம் 
  • காய்ந்த மிளகாய் 
  • தேங்காய் 
  • தக்காளி 
  • கறிவேப்பிலை 
  • கொத்தமல்லி இலை 
  • நல்லெண்ணெய் 
  • உப்பு 

செய்முறை 

கடாயில், ஒரு கப் நறுக்கிய பெரிய வெங்காயம், இரண்டு தக்காளி, எட்டு காய்ந்த மிளகாய், சிறிதளவு கறிவேப்பிலை, 20 மில்லி நல்லெண்ணெய் சேர்த்து வதக்கவும். 

வதங்கிய பின், 1/4 கப் துருவிய தேங்காய், ஒரு கைப்பிடி கொத்தமல்லி இலை சேர்த்து கலந்து விட்டு இறக்கவும். 

ஆறிய பின், தேவையான அளவு உப்பு, தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.
Previous Post Next Post