தேவையான பொருட்கள்
- சிக்கன் லெக் பீஸ்
- பெரிய வெங்காயம்
- தக்காளி
- தனியா தூள்
- மிளகாய் தூள்
- சிக்கன் மசாலா தூள்
- மஞ்சள் தூள்
- மிளகுத்தூள்
- பச்சை மிளகாய்
- எலுமிச்சை சாறு
- சோம்பு
- கடுகு
- இஞ்சி
- பூண்டு
- உப்பு
- நல்லெண்ணெய்
- கறிவேப்பிலை
- கொத்தமல்லி இலை
செய்முறை
முதலில், ஒரு பெரிய வெங்காயம், ஒரு தக்காளி, நான்கு பல் பூண்டு, சிறிதளவு இஞ்சி, இரண்டு ஸ்பூன் தனியா தூள், ஒரு பச்சை மிளகாய், இரண்டு ஸ்பூன் மிளகுத்தூள், ஒரு ஸ்பூன் மிளகாய் தூள், ஒரு ஸ்பூன் சிக்கன் மசாலா தூள், ஒரு ஸ்பூன் சோம்பு, சிறிதளவு கறிவேப்பிலை, இரண்டு ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
பின், குக்கரில், 25 மில்லி நல்லெண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ஒரு ஸ்பூன் கடுகு, சிறிதளவு கறிவேப்பிலை, மூன்று சிக்கன் லெக் பீஸ், ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து ஐந்து நிமிடம் வதக்கவும்.
வதங்கிய பின், அரைத்து வைத்துள்ள மசாலா சேர்த்து ஐந்து நிமிடம் வதக்கவும். மேலும், 1/2 டம்ளர் தண்ணீர், தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து விட்டு இரண்டு விசில் விடவும்.
இறுதியாக, கொத்தமல்லி இலை தூவி கலந்து விடவும்.
